தோனியின் ஐபிஎல் வாழ்க்கை முடிவடைகிறதா..! எழுந்துள்ள சந்தேகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் எம்.எஸ். தோனிக்கு, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் மோதுவதற்கு முன்னதாக, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா 'ஐபிஎல் 18' நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்.
ஐபிஎல்லில் 18 ஆண்டுகள் பங்கேற்றதைக் குறிக்கும் வகையில், தோனிக்கு இந்த நினைவுப் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டி
இருப்பினும், இந்த நினைவுப் பரிசு ஐபிஎல்லில் தோனியின் எதிர்காலம் குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
1⃣8⃣ 𝐬𝐞𝐚𝐬𝐨𝐧𝐬. 1⃣ 𝐢𝐜𝐨𝐧. ♾️ 𝐦𝐞𝐦𝐨𝐫𝐢𝐞𝐬
— IndianPremierLeague (@IPL) March 30, 2025
The legendary MS Dhoni was felicitated by Mr. Devajit Saikia - Honorary Secretary of BCCI ahead of the #RRvCSK clash 💛#TATAIPL | @lonsaikia | @ChennaiIPL | @msdhoni pic.twitter.com/8m8trrNHE5
இந்த ஆண்டு 44 வயதை எட்டவுள்ள தோனியை, சிஎஸ்கே அணி தக்கவைத்துக் கொண்டது. ஆனால் அவரது உடல் தகுதி அந்த அளவுக்கு இல்லை என பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
மேலும், சமீபத்தில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி தன்னை 9வது இடத்திற்குத் தாழ்த்திக் கொண்டார்.
இதனால் தோனி அணியின் வெற்றிக்கு பங்களிக்க முடியுமா என்ற சந்தேகம் இரசிகர்களுக்கு ஏற்பட்டது.
எனினும் இதுவரை, ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே அணியில் தனது எதிர்காலம் குறித்து தோனி எந்த தகவலையும் வெளியிடவில்லை.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
