முடிவுக்கு வந்துள்ள யாழ். கடற்றொழிலாளர்களின் போராட்டம் : டக்ளஸ் அளித்த உறுதிமொழி
இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்களை நிறுத்துமாறு கோரி நான்கு நாட்கள் இடம்பெற்ற உணவு தவிர்ப்புப் போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழியால் கைவிடப்பட்டுள்ளது.
யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனமும், யாழ் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனமும் இணைந்து கடந்த 19ஆம் திகதி காலை முதல் இன்று (22) வரை யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்திற்கு முன்பாக உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்திருந்தனர்.
இந்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நான்கு கடற்றொழிலாளர்களுக்கும் ஆதரவு தெரிவித்து இன்று காலை முதல் நூற்றுக்கணக்கான கடற்றொழிலாளர்கள் ஒன்று கூடியிருந்தனர்.
இந்தியத் தரப்பு
குறித்த போராட்டம் இடம்பெறும் இடத்திற்கு வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா “இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் தமிழ்நாடு, பாண்டிச்சேரி முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் நான் பேசியுள்ளேன்.
பாண்டிச்சேரி முதலமைச்சர் எல்லை தாண்டும் கடற்றொழிலாளர்களை தடுப்பது தொடர்பில் எழுத்து மூலமான உறுதிமொழி தந்துள்ளார்.
மேலும், தமிழக முதல்வர் கடிதம் அனுப்பத் தயாராக இருப்பதாகவும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையகத்துடன் ஆலோசித்து அனுப்புவதாக கூறியுள்ளார்.
கைது செய்யப்படுபவர்களை விடுவிக்க எனக்கு அழுத்தங்கள் வந்தாலும் எனது
நிலைப்பாடு ஒன்றுதான்.
எனினும், இந்தியத் தரப்பு சாதகமான சமிக்ஞைகளை காண்பித்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுங்கள் கடற்றொழிலாளர்கள் பக்கமே நான் நிற்பேன்” என அமைச்சர் டக்ளஸ் தெரிவித்தள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |