வீட்டிலிருந்து வேலை செய்வதனை ஊக்குவிக்க வேண்டும் : தினேஸ் குணவர்தன
வீட்டிலிருந்து வேலை செய்வதனை ஊக்குவிக்க வேண்டுமென கல்வி அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருந்து வேலை செய்வதன் மூலம் தேவையற்ற செலவுகளை தவிர்க்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தனியார் மற்றும் அரசாங்க ஊழியர்கள் வீடுகளிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
முடக்க நிலை அறிவிக்கப்பட்ட காலங்களில் பலர் இவ்வாறு வீட்டிலிருந்து வேலை செய்தனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நவீன தொழில்நுட்பத்துடன் ஒரு கருமங்களை வீட்டிலிருந்தே செய்ய முடியும் என்பது கோவிட் முடக்க நிலைமைகளின் போது தெரியவந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மஹரகம பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எமில் ரஞ்சனுக்கு மரணதண்டனை! - தமிழர்கள் ஐவர் விடுதலை (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
சக்திக்கு வந்த அடுத்த பிரச்சனை, ஜனனிக்கு சவால்விடும் அன்புக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam