நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற பொலிஸாரின் திடீர் சுற்றிவளைப்பு!
பாதுகாப்பு அமைச்சினால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட யுக்கிய சுற்றிவளைப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் 1426 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் ஹெரோயின் 01 கிலோ 86 கிராம், ஐஸ் 782 கிராம் 722 மில்லி கிராம், கஞ்சா 03 கிலோ 774 கிராம் மாவா 01 கிலோ 100 கிராம், மதன மோதக 550 கிராம் 700 மில்லி கிராம், துல் 86 கிராம் 18 மில்லி கிராம், சாம்பல் 380 கிராம் 64 மில்லி கிராம் மற்றும் 1085 மாத்திரைகள் என்பன அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அரிகாரிகள் தெரிவித்தள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 1403 சந்தேக நபர்களில், 213 சந்தேக நபர்கள் பொலிஸ் போதைப்பொருள் பணியகம் மற்றும் பொலிஸ் விஷேட பணியகம், 57 பேர் காத்திருப்பு உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சொத்துக்கள் விசாரணை
இதில் 17 சந்தேக நபர்களின் சொத்துக்கள் விசாரணை மற்றும் சந்தேக நபர்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்ட 23 சந்தேக நபர்களில் குற்றப்பிரிவுகள் தொடர்பான பட்டியலில் 01 திறந்த பிடியாணைகளும், நச்சுத்தன்மையற்ற போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான 21 திறந்த பிடியாணைகளும், வன்முறைக் குற்றங்களுடன் தொடர்புடைய ஒரு திறந்த பிடியாணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாதாள உலக நீதி நடவடிக்கையின் கீழ் 04 பாதாள உலக குற்றவாளிகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை 795 ஆவணப்படுத்தப்பட்ட பாதாள உலக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |