இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் பயணித்த பேருந்திலிருந்து மீட்கப்பட்டுள்ள தோட்டாக்கள்
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடருக்காக இந்தியா சென்ற இலங்கை அணி வீரர்களின் பேருந்தில் இருந்து தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மொஹாலியில் இலங்கை டெஸ்ட் அணி வீரர்களை அழைத்து சென்ற பேருந்திலிருந்தே இவ்வாறு 2 வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளன.
மொஹாலியில் பயிற்சி மைதானத்திற்கும், விடுதிக்கும் இடையில் இலங்கை வீரர்கள் அழைத்துச்செல்லப்பட்ட பேருந்தில் இருந்தே தோட்டாக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வெற்று தோட்டாக்களை இந்திய காவல்துறையினர் மீட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.