இங்கிலாந்தில் வேலைவாய்ப்பு: விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் கைது
ஐக்கிய இராச்சியத்தில் வேலை வாங்கித்தருவதாகக் கூறி பணமோசடி செய்த ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல் கொழும்பு 02 பகுதியில் இந்த நிறுவனம் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த நபர் சம்மாந்துறை பகுதியை சேர்ந்தவர் என்றும், இவர் இங்கிலாந்தில் ஆசிரியர் உதவியாளர் மற்றும் உணவகத்தில் வேலைகளை வழங்குவதாக பெண் ஒருவரிடமும் ஆணிடமும் தலா 40 இலட்சம் ரூபா பணம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், வாக்குறுதியளித்தபடி வேலை கிடைக்காத காரணத்தினால் பணியகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப்பணியகத்தில் முறைப்பாடு
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் சந்தேகநபர் தெஹிவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபருக்கு எதிரான முறைப்பாடுகள் பணியகத்திற்கு ஏற்கனவே கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, வெளிநாட்டு வேலைகளைப் பெறுவதற்கு எந்தவொரு நிறுவனத்திற்கோ அல்லது நபருக்கோ பணம் அல்லது கடவுச்சீட்டை வழங்குவதற்கு முன், பணியகத்தின் www.slbfe.lk இணையத்தளத்தைப் பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்பவர்கள் தளத்திற்குச் சென்று அல்லது 1989 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

தினமும் 300 ரூபாய்க்கு கூலி வேலை செய்து கொண்டே நீட் தேர்வில் தேர்ச்சி.., மதிப்பெண் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri
