500,000 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மலேசியாவில் வேலைவாய்ப்பு! வெளியான தகவல்
இந்த ஆண்டு மலேசியாவிற்கு 500,000 வெளிநாட்டு ஊழியர்கள் வருகை தருவர்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர்களால் மலேசியர்களின் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படாது என மலேசிய மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் தெரிவித்துள்ளார்.
மலேஷியா - பூசிங் நகரில் நேற்று முன்தினம் (15.01.2023) இடம்பெற்ற விழாவொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், 15 ஆசிய நாடுகளிலிருந்து அந்த ஊழியர்கள் வரவழைக்கப்படுவர் என்றும் உள்ளூர்வாசிகள் ஆர்வம் காட்டாத தோட்டத்தொழில், வேளாண்மை, கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் அவர்கள் பணியமர்த்தப்படுவர்.
ஊழியர் பற்றாக்குறைப் பிரச்சினை
இத்துறைகளில் வேலை பார்க்க உள்ளூர் தொழிலாளர்கள் கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது.
அதனால், அத்துறைகள் வெளிநாட்டு ஊழியர்களை அதிகம் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அத்துறைகளுக்குப் போதுமான ஊழியர்களை வழங்க முடியாவிடில், அவற்றின் செயல்பாடு குறைந்து, பேரளவில் இழப்பு ஏற்படலாம்.
கோவிட் நோய் தொற்று காரணமாக 700,000 வெளிநாட்டு ஊழியர்கள் அவர்களுடைய சொந்த நாட்டிற்குத் திரும்பிவிட்டனர்.
அதனால், ஊழியர் பற்றாக்குறைப் பிரச்சினையை உடனடியாகத் தீர்க்க வேண்டும். இல்லாவிடில் அது பொருளியலில் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என குறிப்பிட்டுள்ளார்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
