இலட்சக்கணக்கான இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள வாய்ப்பு!
இந்த ஆண்டு 340,000 இலங்கை குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்ப்பதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று (23) நடைபெற்ற புதிதாக உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில்,''இந்த ஆண்டு 340,000 இலங்கை குடிமக்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அனுமதிகளை பெற்ற சில நிறுவனங்கள் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தகவல் கிடைத்துள்ளது.
விதிமுறை
அத்தகைய நபர்களின் அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் தண்டனைகள் விதிக்கப்படும் 2024 ஆம் ஆண்டில், 311,000 பேருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு குறித்த எண்ணிக்கையை 12% அதிகரிக்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் திட்டங்களை வகுத்துள்ளது.
அதன்படி, விதிமுறைகளை முறையாக நடைமுறைபடுத்திய பின்னர், மக்களை வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக அனுப்ப வேண்டும்.'' என்று கூறியுள்ளார்.
சிறகடிக்க ஆசை சீரியல்: சிந்தாமணியின் மகளிடம் காதலை சொல்லப்போகும் சத்யா.. துணை நிற்கும் முத்து! Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியல் இயக்குநரின் அடுத்த புதிய சீரியல்.. தலைப்பு என்ன தெரியுமா? Cineulagam
பச்ச குழந்தை விஜய்க்கு என்ன தெரியும்? 40 வயது த்ரிஷா தான் தவறு... தாறுமாறாக கலாய்த்த மருத்துவர்! Manithan