தொடருந்து ஊழியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
தொடருந்து ஊழியர்கள் தொடர்ந்தும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால்,சேவையில் இருந்து விலகியதாக கருதி பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஹட்டன் தொடருந்து நிலையத்தில் நேற்று(20) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
வர்த்தமானி
இது தொடர்பில் மேலும் கூறுகையில்,“நாம் அனைவரும் நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும், இல்லையெனில் நாம் பொது சேவை செய்ய முடியாது.

தொடருந்து சேவை அத்தியாவசிய சேவை என வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
தொடருந்து துறை தொடர்பாக ஏதேனும் பிரச்சினை இருந்தால் கலந்துரையாட வேண்டும். இதற்கு பிறகு தொடருந்து வேலைநிறுத்தம் இல்லை.
மக்கள் பாதிக்கப்படும் வகையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் வேலையை கைவிட்டது போன்று பணியிலிருந்து நீக்கப்படுவார்கள்.'' என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 12 மணி நேரம் முன்
மரணத்தைக் கண்டேன்..இயேசுவை சந்தித்த பின் காப்பாற்றப்பட்டேன் - ஐரிஷ் வீரரின் பதிவு வைரல் News Lankasri
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
பள்ளி செல்லும் அகதிப் பிள்ளைகளை தங்கள் நாட்டுக்கு போகும்படி கூறுவதால் உருவாகியுள்ள கலக்கம் News Lankasri