ஊழியர் சேமலாப நிதிய கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ள நிறுவனங்கள்!
ஊழியர்களை பாதுகாத்துக்கொண்டு, ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டிய நிலுவையையும் மாதாந்தக் கொடுப்பனவையும் முறையாகச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளிநாட்டு தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழுவின் குழுவின் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுத் தொழில்கள் மற்றும் உழைப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தலைமையில் கடந்த வாரம் நாடாளுமன்ற வளாகத்தில் கூடிய போதே இவ்வாறு ஆலாேசனை வழங்கியுள்ளார்.
கணக்கில் பதிவுசெய்ய முடியாமல் உள்ளது
அத்துடன் சில பெருந்தோட்டத்துறை நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதிய கொடுப்பனவுகளைச் செலுத்தத் தவறியுள்ளதாகவும், பாரியளவான நிலுவை ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டி உள்ளதாகவும் இதன்போது புலப்பட்டுள்ளது.
மேலும் பெருந்தோட்டத்துறையில் சில நிறுவனங்களினால் செலுத்தப்பட்ட சுமார் 700 மில்லியன் ரூபாய் தொகை தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின் முரண்பட்ட நிலைமை காரணமாக கணக்கில் பதிவுசெய்ய முடியாமல் உள்ளதாகவும் குழுவில் தெரிவிக்கப்பட்டது.
ஊழியர்களை பாதுகாத்துக்கொண்டு, ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்தவேண்டிய நிலுவையையும் மாதாந்தக் கொடுப்பனவையும் முறையாகச் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குழுவின் தலைவர் ஹெக்டர் அப்புஹாமி இதன்போது பெருந்தோட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
அத்துடன், தேசிய அடையாள அட்டை இலக்கத்துக்கு அமைய கணக்குகளை ஆரம்பிப்பதன் மூலம் ஒரு நபருக்குப் பல கணக்குகள் காணப்படும் சிக்கலை நீக்க முடியும் எனவும், அது தொடர்பில் கவனம் செலுத்தி செயற்படுமாறும் அதிகாரிகளுக்குக் குழு ஆலோசனை வழங்கியது.





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 22 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
