ஊழியர் சேமலாப நிதியத்திற்கு பாதிப்பு! ஐஎம்எப் உடன் இலங்கை அரசு பேச வேண்டும்
தேசிய கடன் மறுசீரமைப்பு எவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளது என்பது யாருக்கும் தெரியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களான எமக்கும் தெரியாது. மத்திய வங்கியின் நிதிசபை உறுப்பினர்களுக்கும் தெரியாது என நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
தேசிய கடன் மறுசீரமைப்பு எவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளது என்பது யாருக்கும் தெரியாது. நாடாளுமன்ற உறுப்பினர்களான எமக்கும் தெரியாது. மத்திய வங்கியின் நிதிசபை உறுப்பினர்களுக்கும் தெரியாது.
கடந்த வாரம் குறித்த அதிகாரிகள் நாடாளுமன்ற மேற்பார்வை குழுவுக்கு அழைக்கப்பட்டனர். எனினும் அவர்கள் தமக்கு எந்த தகவலும் தெரியாது எனக் கூறுகின்றனர். ஆனால் ஜனாதிபதியின் அமைச்சரவைக்கு இது தொடர்பில் தெரியும்.
மத்திய வங்கி ஆளுநர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை
தேசிய கடன் மறுசீரமைக்கப்பட்டால் அது ஊழியர் சேமலாப நிதியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்த மதிப்பீடும் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை.
மத்திய வங்கி ஆளுநர் இது தொடர்பில் ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பொறுப்பான நிதி சபையுடனும் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவில்லை.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தேசிய கடன் மறுசீரமைப்பினை மேற்கொள்ள வேண்டாம் எனக் கூறினால், அரசாங்கத்துக்கு அந்த கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டியேற்படும்.
அல்லது தேசிய கடன் மறுசீரமைப்பு குறித்த கடுமையான நிபந்தனைகளை நீக்குமாறு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |