மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்து சபை சாலை முகாமையாளருக்கு எதிராக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு இலங்கை போக்குவரத்துசபை சாலை முகாமையாளருக்கு எதிராக பல குற்றச்சாட்டு தெரிவித்து அவரை இடமாற்றக் கோரி சில ஊழியர்கள் இன்று போக்குவரத்து சபை சாலைக்கு முன்னால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்
. குறித்த சாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் இன்று முன்னெடுக்கப்பட்ட இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
குறித்த முகாமையாளர் கடந்த காலத்தில் இந்த சாலை முகாமையாளராக பணிபுரிந்து இங்கு இடம்பெற்ற மோசடி தொடர்பாக இடைநிறுத்தப்பட்டு பின்னர் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் மீண்டும் முகாமையாளராக கடமையேற்ற நிலையில் இவருக்கு எதிராக ஒருபகுதி ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இருந்தபோதும் இலங்கை போக்குவரத்து சபை கிழக்கு பிராந்திய பணிப்பாளரின் சமரசத்தில் தொடர்ந்து அவர் கடமையாற்றி வரும் நிலையில் மீண்டும் அவருடைய பல செயல்பாடுகள் தொடர்பாக ஊழியர்கள் குற்றச்சாட்டு தெரிவித்து அவரை இடமாற்றுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் கிழக்கு பிராந்திய பணிப்பாளர் வந்து இதற்கான தீர்வு தரும் வரை தொடர்ந்து இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் இடம்பெறும் என போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த 6 மாதத்திற்கு முன்னர் குறித்த முகாமையாளருக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரித்த மட்டக்களப்பில் உள்ள ஊடக நிறுவனம் ஒன்றிற்கு குறித்த முகாமையாளர் சென்று அச்சுறுத்தல் விடுத்ததுடன், அந்த செய்தியாளரை தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்துள்மை தொடர்பாக முகாமையாளருக்கு எதிராக ஊடகவியலாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பொடு தெரிவித்திருந்தபோதும் இன்றுவரை பொலிஸார் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த ஊடகவியலாளர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam