டைட்டன் குறித்து முன்னரே எச்சரித்த நபருக்கு நேர்ந்த கதி - செய்திகளின் தொகுப்பு
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் சில பாதுகாப்புக் குறைபாடுகள் இருப்பதாக முன்பே கூறிய நபரை, ஓஷன்கேட் நிறுவனம் பணியில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
டைட்டானிக் கப்பலைக் காண டைட்டன் நீர்மூழ்கி கப்பலில் சென்றவர்கள், வெடி விபத்தில் பலியானதாகச் செய்தி வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்து குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதாவது, ஓஷன்கேட் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலின் வடிவமைப்பும், பாதுகாப்பு அமைப்புகளும் முறையாக இல்லை என விரிவான ஆய்வறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், ஆழமான கடலுக்குள் செல்லும்போது நீரின் கடுமையான எதிர்கொள்ளும் சக்தி அற்றதாக டைட்டன் இருப்பதாக அவர் எச்சரிக்கை செய்திருந்தார்.
இது தொடர்பிலான மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |




