பொதுமக்களால் முற்றுகையிடப்பட்ட எம்பிலிப்பிட்டிய, பனாமுரே பொலிஸ் நிலையம்! பதற்ற சூழ்நிலை (VIDEO)
எம்பிலிப்பிட்டிய, பனாமுரே பொலிஸ் நிலையத்தை பிரதேசவாசிகள் குழுவொன்று முற்றுகையிட்டதை அடுத்து, அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
எம்பிலிப்பிட்டிய பொலிஸின் தடுப்பு அறைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் நேற்று உயிரிழந்தமையை அடுத்தே குறித்த பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
குடும்பப் பிரச்சனைக் காரணமாக மனைவி செய்த முறைப்பாட்டையடுத்து கைது செய்யப்பட்ட பனாமுர வெலிபொத யாய பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் பொலிஸ் அறைக்குள் தூக்கிட்டு உயிரைப்போக்கிக் கொண்டதாக பொலிஸ் தரப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த பொதுமகன், பொலிஸாரால் தாக்கப்பட்டே கொல்லப்பட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனா்.
இந்த முற்றுகைக் காரணமாக காரணமாக கொலன்னா - எம்பிலிப்பிட்டிய வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு போலிசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.



உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அடுத்த வாரம் கண்டிப்பாக சம்பவம் இருக்கு, முத்துவிடம் சிக்கிய ரோஹினி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam
