திடீரென தரையிறக்கப்பட்ட எமிரேட்ஸ் ஏர்பஸ் விமானம்.. அவசர சிகிச்சை தேவையால் பரபரப்பு!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் மருத்துவ தேவைக்காக அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய எமிரேட்ஸ் ஏர்பஸ் விமானம் மீண்டும் பயணத்தை தொடங்கியுள்ளது.
துபாயிலிருந்து பிரிஸ்பேனுக்கு இயக்கப்படும் எமிரேட்ஸ் ஏர்பஸ் A380 விமானமானது, நேற்று மாலை (20) பயணி ஒருவருக்கு ஏற்பட்ட உடல்நிலை சிக்கலால் கொழும்பு விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.
அதன்படி, திடீரென பயணி ஒருவருக்கு மருத்துவ தேவை ஏற்பட்டதன் காரணமாக இவ்வாறு விமானம் தரையிறக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
வைத்தியசாலையில் அனுமதி
இந்நிலையில், குறித்த விமானம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும், உடல்நிலை சரியில்லாத பயணி உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக வைத்தியாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.

அதனை தொடர்ந்து, மீண்டும் விமானம் புறப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டு, பின்னர் பிரிஸ்பேனுக்கு அதன் பயணத்தை மேற்கொண்டுள்ளது.
அதேவேளை, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பயணியின் உடல் நிலை தொடர்பில் இதுவரை தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை..
கட்டுநாயக்க விமான நிலையம் உலகின் மிகப்பெரிய விமானம் தரையிறங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் இவ்வாறான ஒரு சிக்கலான சூழ்நிலையில் அங்கு விமானம் தரையிறங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |