சாரதிகள் மற்றும் பொதுமக்களுக்கு பொலிஸார் வழங்கும் முக்கிய அறிவித்தல்
சாரதிகள், பயணிகள் மற்றும் பாதசாரிகள் ஆகியோருக்கு பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
இதன்படி, மேல் மாகாணத்தில் வாகன விபத்துக்கள் மற்றும் வீதித் தடைகளை குறைப்பதற்கான விசேட வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மார்ச் 1ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைபெற உள்ளது.
மக்களுக்கு விழிப்புணர்வு
நிகழ்ச்சியின் போது, சில குற்றங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது.
சாரதி அனுமதிபத்திரம் இல்லாமல் வாகனம் செலுத்துதல்
18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வாகனம் ஓட்டுதல்
வருவாய் உரிமம், காப்பீட்டு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், போக்குவரத்து விதிமீறல், சுற்றுவட்ட வீதிகள் தொடர்பான தவறுகள், பாதசாரி கடவையை கடக்கும் போதான தவறுகள், மின் சமிக்ஞைகளுக்கு அருகில் தவறுகள், பேருந்து நிறுத்தங்களில் செய்யும் தவறுகள், தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்துதல், பாதுகாப்பு தலைகவசம் இல்லாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுதல் போன்றவை உள்ளடங்குகிறது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam
