சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தம்!
கேரதீவு - மன்னார் (A32) வீதியிலுள்ள சங்குப்பிட்டிப் பாலத்தின் ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
குறித்த பாலத்தில் அவசர திருத்த வேலைகள் நடைபெறவுள்ளதால் எதிர்வரும் (07.10.2026) மு. ப 8.00 மணியிலிருந்து எதிர்வரும் (12.10.2026) முற்பகல் 8.00 மணி வரை பாலத்தினூடான அனைத்து விதமான போக்குவரத்தும் தடைசெய்யப்படுகின்றது.
திருத்த வேலைகள்
மேலும், சகல விதமான போக்குவரத்திற்கும் தடைசெய்யப்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையினை பயன்படுத்துமாறு தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, பாலத்திற்கான திருத்த வேலைகள் விரைவாக பூர்த்தி செய்யப்படும் பட்சத்தில் குறித்த தினத்திற்கு முன்னர் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படும் எனவும் வீதி அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.