இலங்கையின் கடல்சார் பேரழிவுகள் மற்றும் அவசர நிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதையும், கடல் பேரழிவுகள் அல்லது அவசர நிலைகளில் உடனடியாக பதிலளிப்பதை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, அவசர அழைப்பு இலக்கமொன்று அறிமுகம்படுத்தப்பட்டுள்ளது.
கடல்சார் பேரழிவுகள்
இலங்கை கடற்படையியல் திணைக்களம் 24 மணி நேரமும் செயல்படும் அவசர அழைப்பு இலக்கமான ‘106’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த இலக்கத்திற்கு அழைத்தால், பொதுமக்கள் நேரடியாக கடற்படையியல் திணைக்களத்தின் செயற்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டு அவசர சூழ்நிலைகளைத் தெரிவிக்க முடியும்.
இந்த புதிய அவசர அழைப்பு இலக்கத்தின் மூலமாக, பதிலளிக்கும் காலத்தை குறைத்து, கடல்சார் பேரழிவுகளுக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதே முக்கிய நோக்கமாகும்.
அவசர சூழ்நிலை
இது, பொதுமக்கள், கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்கரை பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விரைவான, நேரடி தகவல்தொடர்பு வாய்ப்பை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடற்படையியல் திணைக்களத்தின் செயற்பாட்டு தயார்தன்மையை உயர்த்துவதோடு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தேசிய முயற்சிகளையும் வலுப்படுத்தும்.
எனவே, கடலில் ஏதேனும் அவசர சூழ்நிலை ஏற்படும் போது, அனைத்து கடற்தொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினரும் ‘106’ என்ற அவசர அழைப்பு இலக்கத்தை பயன்படுத்துமாறு இலங்கை கடற்படையியல் திணைக்களம் கேட்டுக்கொள்கிறது.

Super singer மேடையில் யாழ்ப்பாணத்து குயில்- இறுதிச்சுற்றிக்கான பாடலா? இமான் பதிலால் குஷியான அரங்கம் Manithan

முதன்முறையாக தனது மகளின் முகத்தை காட்டி போட்டோ வெளியிட்ட பாக்கியலட்சுமி சீரியல் நடிகை ரித்திகா.. செம ஸ்டில்ஸ் Cineulagam

தமிழ் புத்தாண்டு இந்த 3 ராசியினரை கோடீஸ்வரராக மாற்றப்போகுதாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
