கொழும்பு வாழ் மக்களுக்கான அவசர அறிவித்தல்
கொழும்பின் சில பகுதிகளில் நாளை மறுதினம் சனிக்கிழமை 16மணி நேர நீர் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
அவசர திருத்தப்பணிகள் காரணமாக நாளை மறுதினம் காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணிவரையில் இந்த நீர் விநியோகத்தடை நடைமுறையில் இருக்கும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு, தெஹிவளை, கல்கிஸ்ஸை, கோட்டே மற்றும் கடுவளை மாநகர சபை அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நீர்விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதுதவிர, மகரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும், கொட்டிக்காவத்தை மற்றும் முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும் நாளை மறுதினம் 16மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 2 நாட்கள் முன்
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மலர்ந்த காதல் - கேரள பெண்ணை திருமணம் செய்த ஸ்காட்லாந்து எம்.பி News Lankasri