தீவிரமடையும் இலங்கையின் நிலை! நாட்டு மக்களுக்கான அவசர அறிவித்தல்
பொதுமக்கள் அவசியம் இன்றி உணவுப் பொருட்களை சேமித்து வைக்கக் கூடாது என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை தீவிரமடைந்ததன் காரணமாக உணவுப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதுடன் பல உணவுப் பொருட்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையிலேயே அவசியம் இன்றி உணவுப் பொருட்களை அதிகமாக சேமித்து வைக்க வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
டின் மீனின் விலையும் அதிகரித்தது |
அத்துடன், நுகர்வோர் இவ்வாறு தேவையற்ற சேகரிப்புகளை மேற்கொண்டால், அது சந்தையின் இயல்பு நிலையை பாதிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
லாஃப் எரிவாயு நிறுவனத்திடம் விசாரணை
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிப்பு தொடர்பில் லாஃப் எரிவாயு நிறுவனத்திடம் விசாரணை நடத்துமாறு நுகர்வோர் அதிகார சபைக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
You My Like This Video