இலங்கையில் நிலவும் கடும் வெப்பம்! குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
வெப்பத்தினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதகமான விளைவுகளை தவிர்ப்பதற்கு பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டுமென லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அதிக திரவங்களை பயன்படுத்துவதன் மூலம் வெப்பமான காலநிலையினால் ஏற்படும் சிக்கல்களை குறைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சருமத்தில் ஏற்படும் சிக்கல்கள்
இன்றைய நாட்களில் தோல் நோய்கள் அதிகரித்து வருவதாகவும், சிறிய குழந்தைகள் தினமும் இரு வேளை குளிக்க வேண்டும்.சோர்வு, தூக்கம், உடல் வலி, சிலருக்கு வாந்தி போன்றவை ஏற்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குழந்தைகள் மற்றும் பெற்றோர் அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். அதிகப்படியான வியர்வை வெப்ப அதிர்ச்சி நிலைமைகளுக்கு வழிவகுக்கும். திரவ உணவுகளை அதிகம் உட்கொள்வதன் மூலம் இந்த சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம்.
மேலும் இயற்கையான பழச்சாறு, ஆரஞ்சு, , மாதுளை, குரும்பா தண்ணீர், ஜீவனி போன்றவற்றை பருகலாம். இல்லாவிட்டால் நமது தோல் நோய்களும் அதிகரிக்கலாம். குழந்தைகளிடையே வியர்வை கொப்புளங்கள், தோலழற்சி போன்றன அதிகரிக்கலாம்.
எனவே குழந்தைகளை சுமார் 20 நிமிடங்கள் தண்ணீரில் இருக்க விடுங்கள். இது சருமத்தில் ஏற்படும் சிக்கல்களைக் குறைக்கும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
சிறப்பு விழிப்புணர்வு ஆலோசணை
இதேவேளை, அதிக வெப்பநிலையால் ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகளைத் தவிர்ப்பது குறித்து சுகாதார மேம்பாட்டுப் பணியகம் சிறப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி, தாகம் எடுக்கும் வரை தண்ணீர் குடிக்கவும்.தண்ணீருக்கு பதிலாக இனிப்பு பானங்கள் அருந்துவதை தவிர்க்கவும் காலை 11:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை அதிக சூரிய ஒளியில் செலவிடும் நேரத்தை குறைக்கவும்.முடிந்தவரை வெளிர் நிற வெளிர் பருத்தி ஆடைகளை அணியவும்.
வெளியில் சுற்றித் திரியும் போது முடிந்தவரை குடைகள் மற்றும் தொப்பிகளைப் பயன்படுத்துதல் அவசியம். வயதானவர்கள் அல்லது நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகள் இந்த நிலையில் பாதிக்கப்படுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர், எனவே அவர்கள் தொடர்பில் சிறப்பு கவனம் செலுத்துதல் வேண்டும்.
குறிப்பாக மேற்கு மற்றும் தெற்கு கரையோரங்களில் நிலவும் வறண்ட காலநிலையினால் இந்த அபாய நிலைமை அதிகரித்துள்ளதாகவும், வெப்பநிலை இயல்பை விட கணிசமாக அதிகரித்து வருவதாகவும் சுகாதார மேம்பாட்டு பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

மலிவான வட்டி விகிதத்தில் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கும் இந்திய அரசு.., எந்தெந்த வங்கிகள் தெரியுமா? News Lankasri

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
