இலங்கையில் நிலவும் கடும் குளிர்! குழந்தைகள் தொடர்பில் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையின் காரணமாக நாட்டை சூழவுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், பல பகுதிகளில் நிலவும் கடும் குளிரான காலநிலை காரணமாக சிறுவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும்,பல நோய்களுக்கு உள்ளாகுவதாகவும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
குழந்தைகளை பாதுகாப்பது எப்படி?
இதன் காரணமாக, கடும் குளிரில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பது தொடர்பில் குழந்தை நல மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா விளக்கியுள்ளார்.
"குழந்தைகளுக்கு குளிர் அதிகமாக இருக்கும் போது பல நோய்கள் வரலாம். குறிப்பாக சளியால் குழந்தைகளுக்கு காய்ச்சல் அதிகமாகும். அதனால், இந்த நாட்களில் குழந்தைகள் வெளியே சென்றால், நன்றாக உடை அணிந்து, தொப்பி போட்டு, இரண்டு காலுறைகளை அணியுங்கள். இல்லையெனில், சளி ஆரம்பித்தால், காய்ச்சல் எளிதில் பரவும்.
"தூசி நிறைந்த இடத்தில் இருந்தால், முகமூடியை தொடர்ந்து பயன்படுத்துங்கள். எடை குறைந்த மற்றும் குறைமாத குழந்தைகளுக்கு இந்த குளிர் அவ்வளவு நல்லதல்ல. அத்தகைய குழந்தைகளுக்கு, நன்றாக உடுத்தி, தொப்பி மற்றும் இரண்டு காலுறைகளை அணியுங்கள்.
இரண்டு கைகளிலும் இரண்டு சாக்ஸ் போட்டு போர்த்தி விடுங்கள். குழந்தைகளின் உடல் வெப்பநிலை குறையும் போது நோய்வாய்ப்படலாம் எனவும் தெரிவித்துள்ளார்.