சேவையில் ஈடுபடும் ஆசிரியர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு எடுத்துள்ள உடனடி நடவடிக்கை
சேவையில் ஈடுபடும் ஆசிரியர்களை தமது வீடுகளுக்கு அருகில் உள்ள பாடசாலைகளில் கடமையில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு விசேட தீர்மானம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியான சுற்றுநிரூபம்

மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு இதற்கான அதிகாரத்தை வழங்கும் வகையில், கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்று நிரூபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்களை தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைக்கு அமர்த்தும் போது, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயற்படுமாறும் கல்வி அமைச்சு, அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
தேசிய பாடசாலை, சாதாரண பாடசாலை என்ற வேறுபாடின்றி ஆசிரியர்களை இவ்வாறு சேவைக்கு அமர்த்த முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2026: 12 ராசிகளுக்குமான சிறப்பு பலன்கள்... 4 பிரபல ஜோதிட நிபுணர்களின் கணிப்பு ஒரே பார்வையில்! Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆஃபர் - ரூ.1,000 முதலீடு செய்தால், மாதம் ரூ.20,500 பெறலாம் News Lankasri