அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் அவசர கலந்துரையாடல்: செய்திகளின் தொகுப்பு
அமைச்சரவைக் கூட்டம், அமைச்சரவை தீர்மானத்தைப் பகிரங்கமாக விமர்சித்த அமைச்சர்களைப் பதவி நீக்கம் செய்யுமாறு அரசதலைவரிடம் கோரிக்கை விடுக்கும் வகையில் அரசாங்கத்தின் பின்வரிசை உறுப்பினர்கள் அவசர கலந்துரையாடல் ஒன்றை நடத்தி வருவதாக ஆளும் கட்சியை மேற்கோள்காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த செய்திக் குறிப்பில், அமைச்சரவை தீர்மானத்தைப் பகிரங்கமாக விமர்சித்த குற்றச்சாட்டின் பேரில் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார ( vasudeva nanayakkara), விமல் வீரவன்ச (wimal weerawansa) மற்றும் உதய கம்மன்பில ( udaya gammanpila) ஆகியோரை நீக்குவது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய ஐரோப்பியப் பயணத்தை முடித்துக் கொண்டு அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச வந்தவுடன் இதனை விளக்கமளிக்க, பின் வரிசை உறுப்பினர்கள் தயாராகி வருகின்றனர். அதற்கு முன்னதாக பிரதமர் மகிந்த ராஜபக்சவுடன்()பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது என்றுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய தமிழ்வின் செய்திகளின் தொகுப்பு,