நாட்டில் அவசர கால நிலை பிரகடனம்..
புதிய இணைப்பு
தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அவசர கால நிலை சட்டத்தின் படி அதிக அதிகாரங்கள் அரச இயந்திரத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய அனர்த்தத்தின் போது நாட்டின் சாதாரண நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படுதை தடுத்து நிறுத்துவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த அதிகாரங்களை பயன்படுத்தி மக்களின் இயல்பு வாழ்க்கையை மீள் அமைப்பதே இதன் நோக்கம் என ஜனாதிபதியின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள அவரசகால சேவைகள்..
மின்சாரம் வழங்கல் தொடர்பான சேவைகள்,
எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் மற்றும் கொண்டு செல்லல்,
வைத்தியசாலைகள், வைத்திய சேவைகள் வழங்கும் அனைத்து நிறுவனங்களும் பணியில்,
போக்குவரத்து மற்றும் பொருட்கள் கொண்டு செல்லல்,
நீர் வழங்கல் மற்றும் அது தொடர்பான அனைத்து சேவைகளும்,
அத்தியாவசிய சேவைகள் வழங்கல் மற்றும் அது தொடர்பான அனைத்தும்.

முதலாம் இணைப்பு
நாட்டில் தற்போது நிலவும் அசாதரண நிலைமை காரணமாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.
டிட்வா புயலால் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
https://ripbook.com/heartfelt-tribute-692ac62d27e99/notice/remembrance-692ac72bd6716
கடுமையான வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் 100இற்கும் மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதுடன் எண்ணற்றவர்கள் காணாமல் போயுள்ளனர்.
இந்நிலையில், மேலும் தீவிரமடைந்து வரும் காலநிலையின் சீற்றம் காரணமாக தற்போதைய நிலைமை இன்னும் மோசமடையலாம் என கூறப்படுகின்றது.
இதற்கிடையில் ஏற்படும் பாதிப்புக்களையும் உயிரிழப்புக்களையும் குறைக்கும் முகமாகவும் மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர காலச் சட்டத்தை பிறப்பித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri