ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை
பூமியின் வெப்பநிலை புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் இம்மாதம் மனித வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் சராசரி வெப்பம் உச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பு பிரிவு இதனை கூறியுள்ளது.
எல் நினோ காலநிலை நிகழ்வு
மேலும், எல் நினோ காலநிலை நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில் தீவிர வானிலை மற்றும் அதிக வெப்பம் அடிக்கடி நிகழும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எல் நினோ நிகழ்வு ஏற்பட்டுள்ள நிலையில் வெப்பம் மேலும் அதிகரிக்கலாம் என்றும் மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெப்பம் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், C3S அமைப்பின் துணை இயக்குனர் சமந்தா பர்கெஸ் கூறுகையில்,
இதுவரை இல்லாத வகையில் உலகம் அதன் வெப்பமான சூன் முதல் வாரத்தில் பதிவு செய்துள்ளது.
கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும்போது, வெப்பம் 0.1 டிகிரி செல்ஸியஸ் குறைந்துள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதுவரை சூன் வாரம் இந்த அளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்தது இல்லை.இந்தாண்டு சூன் தொடக்கத்தில் உலகளவில் மேற்பரப்பு காற்றின் வெப்பம் என்பது இதுவரை பதிவனத்தில் கணிசமாக அதிகமாக உள்ளது' என தெரிவித்துள்ளார்.
