ராஜபக்சர் குடும்பத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ள அரசியல் பிரசாரம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் தற்போது நெருங்கி தமது ஆதரவை வெளியிட்டு வரும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சகாக்கள் வெளியிட்ட அறிக்கைகள் தொடர்பில் விமர்சனங்கள் முன்வைகப்பட்டு வருகின்றன.
திஸ்ஸகுட்டிராச்சி மற்றும் இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஆகிய இருவரும் வெளியிட்ட பிரசாரம் மற்றும் அரசியல் சூழ்ச்சி அறிக்கைகள் இப்போது குறிப்பாக ராஜபக்சர் குடும்பத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் பின்னணியில் நாமல் ராஜபக்ச, மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கும் நகர்வில் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
புதிய பிரசாரத் திட்டங்கள்
இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, புதிய பிரசாரத் திட்டங்களைத் தயாரிக்க நாமல் நெருங்கிய சகாக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் கட்சியின் உள்ளக வட்டாரங்களை மேற்கோள் காட்டியுள்ளன.
இருப்பினும், நாமல் ராஜபக்ச இதுவரை நடந்து கொண்ட விதத்தின் அடிப்படையில் புதிய பொறுப்புகளை ஏற்க யாரும் முன்வரவில்லை என்பதை கட்சியின் உள்ளக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி மகாநாயக்க தேரர்களை நேரடியாகத் சந்திப்பதன் மூலம் நாமல் தொடங்க திட்டமிட்டிருந்த அரசியல் திட்டமும் முற்றிலும் தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.





வெளிநாடொன்றில் பிரபல இந்திய தம்பதி விபத்தில் பலி: பிள்ளைகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி News Lankasri

கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
