இலங்கை மற்றும் சர்வதேச புலம்பெயர் தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
இலங்கையின் காலனித்துவ கட்டமைப்பிற்குள் தமிழர்களை சிக்க வைக்கும் நோக்கம் கொண்ட 13வது திருத்தம், கூட்டாட்சி அல்லது நிர்வாக சபைகள் பற்றி விவாதிப்பதை நிறுத்துமாறு இலங்கை மற்றும் சர்வதேச புலம்பெயர்ந்த தமிழர்களிடம், அமெரிக்க தமிழர்கள் கோரியுள்ளனர்.
தமிழ் சுதந்திரத்திற்கான பாதை 13வது திருத்தத்தில் இல்லை, கூட்டாட்சியில் இல்லை, மாறாக ஐக்கிய நாடுகளின் காலனித்துவ நீக்க செயல்முறை மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ள தமிழர்களின் ஒற்றுமை மூலம் உள்ளது என்றும் என்றும் அமெரிக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டாட்சி அல்லது நிர்வாகத் தீர்வுகள் என்பது தமிழ் தேசிய உரிமைகளை நீர்த்துப்போகச் செய்வதற்கும் சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசைப் பாதுகாப்பதற்கும் நோக்கமாகக் கொண்ட கவனச்சிதறல்கள் என்றும் வாதத்தை அவர்கள் முன்வைத்துள்ளனர்.
ஈழத் தமிழர்கள் மற்றும் உலகளாவிய புலம்பெயர்ந்தோரிடம் இந்த கோரிக்கையை அமெரிக்கத் தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
“எஸ்.ஜே.வி. செல்வநாயகம், ஜி.ஜி. பொன்னம்பலம் மற்றும் ஏ. அமிர்தலிங்கம் போன்ற பழைய தமிழ்த் தலைவர்கள் ஈழத்தில் கூட்டாட்சி மற்றும் கொழும்பில் நிர்வாக சபைகள் பற்றிப் பேசி தமிழ் மக்களை ஏமாற்றினர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று அமெரிக்க தமிழர்களின் அறிக்கை கூறுகிறது.

வரலாற்றுத் தவறுகளை மீண்டும் செய்யவேண்டாம்
அந்தக் கருத்துக்கள் காலனித்துவ அரசியலமைப்பிற்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை அளித்தன, மேலும் முழு இறையாண்மைக்கான அழைப்பை பலவீனப்படுத்தின என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில்,கொழும்பின் அரசியல் அமைப்பிற்குள் தவறான சமரசங்களை ஏற்றுக்கொண்ட குறித்த தலைவர்களின் வரலாற்றுத் தவறுகளை மீண்டும் செய்ய வேண்டாம் என்றும் அமெரிக்க தமிழர் அமைப்பு கோரியுள்ளது.
தமிழ் தாயகம் ஒரு சம்மதமில்லாத காலனித்துவ இணைப்பு என்றும், சர்வதேச சட்டத்தின் கீழ் சுயராஜ்ஜியமற்ற பிரதேசமாகவே உள்ளது என்பதை அங்கீகரிக்கக் கோரி, ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் காலனித்துவ நீக்கத்திற்கான சிறப்புக் குழுவின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அமெரிக்கத் தமிழ் புலம்பெயர்ந்தோர் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், காலனித்துவ ஆதிக்கத்தின் கீழ் உள்ள மக்களுக்கு சுயநிர்ணய உரிமை மற்றும் இறையாண்மைக்கான பிரிக்க முடியாத உரிமை உள்ளது என்பதை அங்கீகரிக்கும் ஐக்கிய நாடுகளின் 1960 காலனித்துவ நீக்கப் பிரகடனத்தின் (தீர்மானம் 1514) பின்னால் தமிழர்கள் ஒன்றுபட வேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சிங்கள உயரடுக்கிற்கு முழு அதிகாரம்
காலனித்துவத்திற்கு முன்னால் பல நூற்றாண்டுகளாக, வடக்கில் யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியம்,மத்திய மலைகளில் கண்டி இராச்சியம், மற்றும் தெற்கில் கோட்டே இராச்சியம் என்று தீவில் மூன்று தனித்துவமான இறையாண்மை கொண்ட இராச்சியங்கள் இருந்தன
எனினும், 1833 ஆம் ஆண்டில், தமிழர்களின் ஒப்புதல் இல்லாமல், கோல்புரூக்-கேமரூன் சீர்திருத்தங்கள் மூலம், ஆங்கிலேயர்கள் இந்த நாடுகளை வலுக்கட்டாயமாக ஒரே நிர்வாகத்தில் இணைத்தனர்.
1948 இல் பிரித்தானியா இலங்கைக்கு சுதந்திரம் வழங்கியபோது, தமிழர்களின் இறையாண்மையை புறக்கணித்து, சிங்கள உயரடுக்கிற்கு முழு அதிகாரத்தையும் மாற்றியதாகவும் அமெரிக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தமிழ் சுதந்திரத்திற்கான பாதை 13வது திருத்தத்தில் இல்லை, கூட்டாட்சியில் இல்லை, மாறாக ஐக்கிய நாடுகளின் காலனித்துவ நீக்க செயல்முறை மற்றும் அனைத்து இடங்களிலும் உள்ள தமிழர்களின் ஒற்றுமை மூலம் உள்ளது என்றும் என்றும் அமெரிக்க புலம்பெயர்ந்த தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |