பதவி விலகுவது தொடர்பில் எலான் மஸ்க்கின் தகவல்
டுவிட்டரின் தலைமைச் செயல் அதிகாரி பதவிக்கேற்ற ஒரு முட்டாளை கண்டறிந்த பின்னர் தான், அந்த பதவியில் இருந்து விலகுவதாக எலான் மஸ்க் கூறியுள்ளார்.
கடந்த ஞாற்றுக்கிழமை நடத்தப்பட்ட டுவிட்டர் வாக்கெடுப்பின் முடிவுக்கு அமைய 57.5% பயனர்கள் அவர், அந்த பதவியில் விலகுவதற்கு "ஆம்" என்று வாக்களித்துள்ளனர்.
42.5 வீதமானோர் இல்லை என்று வாக்களித்துள்ளனர்.
மாற்றங்கள் தொடர்பில் விமர்சனங்கள்
இந்த நிலையில் தாம், குறித்த பதவியில் இருந்து விலகிய பின்னர், மென்பொருள் மற்றும் சேவையக குழுக்களை இயக்கப் போவதாக மஸ்க் கூறியுள்ளார்.
அவர் பதவியேற்றதிலிருந்து ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் குறித்து விமர்சனங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இதேவேளை மஸ்க், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தையும் இயக்குகிறார்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
