எலொன் மஸ்கின் ஸ்டார் லிங்க் சேவைக்கு அரசாங்கம் அனுமதி
உலகின் முன்னனி செல்வந்தர்களில் ஒருவரான எலொன் மஸ்கின் ஸ்டார் லிங்க் செயற்கை கோள் இணைய சேவைக்கு இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனத்திற்கு, இலங்கைத் தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (TRCSL) அனுமதி வழங்கியுள்ளது.
இந்த விடயத்தை தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் அறிவித்துள்ளார். உரிய வகையில் பொதுமக்கள் கருத்தறியப்பட்டதன் பின்னரே இந்த அனுமதி வழங்கபட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை கோள் இணைய வசதி
இது தொடர்பான மேலதிக தகவல்கள் நாளை வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்டார்லிங்க் செயற்கை கோள் இணைய வசதி தொடர்பில் பல்வேறு வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில் அரசாங்கம் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOINNOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 30 நிமிடங்கள் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
