மீண்டு்ம் சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்க்
உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், டுவிட்டர், நியூராலிங்க் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார்.
இதில் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளைக்குள் 'சிப்' பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை தொடங்க இருப்பதாக தெரிவித்து இதற்காக 2018-ம் ஆண்டு முதல் நடத்தும் பரிசோதனையில் விலங்குகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
1500 விலங்குகள் உயிரிழப்பு
இதுவரை பரிசோதனையில் செம்மறி ஆடுகள், பன்றிகள், குரங்குகள் உட்பட சுமார் 1500 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நியூராலிங்க் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள், விலங்குகள் கொல்லப்பட்டதை உறுதிபடுத்தினர். விலங்குகளிடம் நடந்த பரிசோதனைகள் அவசர அவசரமாக செய்யப்பட்டதால் விலங்குகள் கடுமையாக துன்புறுத்தப்பட்டு உயிரிழப்புகளை சந்தித்தன என்று தெரிவித்தனர்.
பரிசோதனையில் விலங்குகள் கொல்லப்பட்டு இருப்பது விலங்குகள் நலன் மீறல் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியை விரைவுபடுத்துவதற்கான எலான் மஸ்க்கின் அறிவுறுத்தலால் விலங்குகளின் இறப்பு எண்ணிக்கை தேவையை விட அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து விலங்கு நல சட்டத்தின் கீழ் நியூராலிங்க் நிறுவனம் மீது அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எலான் மஸ்க் மற்றும் நியூராலிங்க் நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 5 மணி நேரம் முன்

தூரத்திலிருந்து ஒரே கிக்கில் வீரர்களை தாண்டி கோல்! இரண்டு கோல்கள் அடித்து அதிர வைத்த பிரேசில் வீரர் News Lankasri

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

என் அழகான மனைவி இறந்துவிட்டாள்! உருகிய கணவர்..பிரித்தானிய பெண்ணின் மரணத்தில் ஒரு மாதத்திற்கு பின் விலகிய மர்மம் News Lankasri
