வெள்ளை மாளிகையில் குப்பை என விமர்சிக்கப்பட்ட மஸ்க்கின் விலகல் விவகாரம்
எலான் மஸ்க் தனது டோஜ் பதவியிலிருந்து விரைவில் விலகுவார் என்ற செய்தி அறிக்கையை வெள்ளை மாளிகை குப்பை என விமர்சித்துள்ளது.
அமெரிக்காவில், ரோஸ் கார்டனில் இன்று வரி கட்டண அறிவிப்பு நிகழ்வுக்கு ஊழியர்கள் தயாராகி வரும் நிலையில், வெள்ளை மாளிகையில் எலான் மஸ்க்கின் பதவி விலகல் விவகாரம் ஜனாதிபதி ட்ரம்பால் முன்வைக்கப்பட்டது.
இதன்போது, வரும் வாரங்களில் எலான் மஸ்க் தனது அரசாங்கப் பொறுப்பிலிருந்து விலகுவார் என்று ஜனாதிபதி ட்ரம்ப் தனது நெருங்கிய வட்டத்திடம் கூறியுள்ளார்.
ட்ரம்பின் அறிக்கை
இந்நிலையில், வெள்ளை மாளிகை இந்த அறிக்கையை "குப்பை" என்று அழைத்தது. மேலும் ட்ரம்பின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட், எக்ஸில் மஸ்க் "அவரது பணி முடிந்ததும் வெளியேறுவார்" என்று கூறியுள்ள போதும், அவர் ஒரு காலக்கெடுவை குறிப்பிடவில்லை.
அமெரிக்க அரசாங்கத்தில் பெரும் சிக்கலான காலங்களை அவர் மேற்பார்வையிட்ட அரசாங்க செயல்திறன் துறை என்று அழைக்கப்படும் துறையுடன் மஸ்க் பணியாற்றிய காலம் ஒருபோதும் தெளிவுபடுத்தப்படவில்லை.
அவர் ஒரு "சிறப்பு அரசு ஊழியர்" என்று வகைப்படுத்தப்படுகிறார், இது அவரது சேவையை வருடத்திற்கு 130 நாட்களுக்கு மட்டுப்படுத்தும். அந்த 130 நாள் காலக்கெடுவிற்குள் டொஜ்ஜில் "தேவையான பெரும்பாலான வேலைகளைச் செய்திருப்பார்" என்று தான் நம்புவதாக மஸ்க் கூறினார்.
மேலும், விஸ்கான்சினில் நடந்த தேர்தலில் மஸ்க் பெரும் பின்னடைவைச் சந்தித்த மறுநாள் காலையில் பொலிட்டிகோ அறிக்கை வருகிறது. மாநில உச்ச நீதிமன்ற பதவிக்கான போட்டியில் தோல்வியடைந்த ஒரு பழமைவாத நீதிபதிக்காக அவர் 20 மில்லியன் டொலர்கள் செலவில் பிரசாரம் செய்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

Ethirneechal: வீட்டிற்கு திரும்பிய மருமகள்கள்! கதிரை அறைந்த விசாலாட்சி... எதிர்பாராத திருப்பம் Manithan
