2002ஐ நினைவுபடுத்திய எல்ல விபத்தின் மர்மம்... அதே நாள்! அதே இடம்!
எல்ல - வெல்லவாய பிரதான சாலையில் நேற்று(04.09.2025) பதிவான விபத்து, 23 வருடங்களுக்கு முன்னர் நடந்த அதேபோன்ற விபத்துடன் ஒரு ஒற்றுமையை ஏற்படுத்துவதாக சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வருகின்றது.
2002ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 04ஆம் திகதி 24ஆவது மைல் கல்லில் ஒரு பேருந்து பள்ளத்தில் விழுந்து 21 பேர் உயிரிழந்தனர்.
குறித்த விபத்து நேற்றையதினம் விபத்து ஏற்பட்ட அதே பகுதியில் நடந்துள்ளது.
இரண்டு விபத்துக்கள்
இரண்டு விபத்துகளிலும் பேருந்து, பள்ளத்தில் சரிந்து வீழ்ந்த காரணத்தினாலேயே விபத்து ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு இரண்டு விபத்துக்கள் ஒரே நாளில் நடந்திருப்பது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
இதேவேளை, நேற்றிரவு நடந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 34 பேரில் 15 பேர் உயிரிழந்ததோடு 18 பேர் காயமடைந்தனர்.
மேலும், ஒருவரை தற்போது வரை காணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |