பல கோர விபத்துக்கள் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள்! மக்கள் வெளியிடும் ஆதாரம்
வாகனத்தில் பெண்ணொருவரை இடித்து கொலை செய்தவருக்கு உடனே பிணை கொடுக்கும் அளவிற்கு இலங்கையின் வீதி விதிகள் தொடர்பான சட்டங்கள் மோசமான நிலையில் இருப்பதாக பொது மகன் ஒருவர் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் மக்கள் குரல் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,''டிப்பர் வாகனத்தை ஒருவர் செலுத்தி வந்த போது அந்த வாகனம் ஒரு பெண்ணின் மீது மோதி அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
ஆனால் இந்த கோர விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு பொலிஸார் உடனடியாக பிணை வழங்கினார்கள். இது இலங்கையில் நிலவும் சட்ட ஒழுங்கற்ற தன்மையை காட்டுகிறது''என கூறியுள்ளார்.
இதேபோன்று மக்கள் குரல் நிகழ்ச்சியில் பலர் பல்வேறு வாகன விபத்து தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அந்த கருத்துக்களை இந்த காணொளியில் முழுமையாக காணலாம்...,



