எல்ல - வெல்லவாய விபத்து : திருமணமாகி இரண்டு மாதங்களேயான ஆண் ஒருவர் பலி
எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று(04) இரவு இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி இரண்டு மாதங்களேயான ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்காலை வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இரண்டு மணி நேரத்தில்
குறித்த நபரின் மனைவி கர்ப்பமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து குறித்து உயிரிழந்தவரின் மனைவி கருத்துத் தெரிவிக்கையில், “எனது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் சுற்றுலாவில் இணைந்து கொள்ளவில்லை. மற்ற அனைவரும் சென்றதால் என் கணவர் சென்றார்.
என் கணவர் கடைசியாக ராவண எல்ல அருவிக்கு அருகில் வைத்து எனக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தினார்.
அதனால் அவர் இரண்டு மணி நேரத்தில் வீட்டுக்கு வந்துவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் வரவில்லை.
அதனால் நான் பல முறை அவருக்கு அழைப்பை மேற்கொண்டேன். ஆனால் அவருடைய தொலைபேசி இயங்கவில்லை.
பின்னர் தான் விபத்து தொடர்பிலான செய்தியைக் கேள்வியுற்றேன், இந்த துக்கத்தை நான் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும்" எனக் கூறியுள்ளார்.
குறித்த விபத்தில்15 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 18 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



