ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்க நிர்வாகம் நடவடிக்கை
ஆனையிறவு உப்பளத் தொழிலாளர்கள் முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டத்தை பொலிஸாரை கொண்டு நீதி மன்ற தடையுத்தரவு ஒன்றை பெற்று அடக்குவதற்கு உப்பள நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பது மிகுந்த கவலையினை ஏற்படுத்தியுள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உப்பு இங்கே பொதியிடுங்கள்,அம்பாந்தோட்டை, புத்தளம், மன்னாருக்கு கட்டி உப்பு கொண்டு செல்வதனை நிறுத்தி ஆனையிறவில் பொதியிடுங்கள், தொழிலாளர்களுக்கு தினமும் வேலையை வழங்க வேண்டும், தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்துவதனை நிறுத்த வேண்டும், உப்பள முகாமையாளரை மாற்றம் செய்ய வேண்டும்,தொழிலாளர்களுக்கான ஒரு தொழிற்சங்கத்தை இயங்கவிடு, ரஜ சோல்ட் என்ற பெயரை ஆனையிறவு உப்பு என மாற்றம் செய் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து அமைதியான முறையில் பந்தல் அமைத்து எமது கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.
தடுத்து நிறுத்த நடவடிக்கை
இந்த கவனயீர்ப்பு போராட்ட அடக்கும் வகையில் தவறான தகவல்களை பொலிஸார் ஊடாக நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு சென்று எமது கனயீர்ப்பு போராட்டத்தை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன் மூலம் இங்கிருந்து கட்டி உப்பை மூலப்பொருளாக அம்பாந்தோட்டை, மன்னார், மற்றும் புத்தளத்திற்கு எடுத்துச் செல்லும் நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளனர்.
எனவே இதனை நாம் வன்மையான கண்டிக்கின்றோம் எனத் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Optical illusion: '7' ம் இலக்க சிவப்பு ஆப்பிள்களுக்கு மத்தியில் இருக்கும் '2'ம் இலக்க ஆப்பிள் எங்கே? Manithan
