ஆனையிறவு உப்பள விவகாரம்.. நீதிமன்றம் விடுத்துள்ள தடை உத்தரவு
கிளிநொச்சி - ஆனையிறவு உப்பளத்தில் உற்பத்தி செய்யும் உப்பினை வெளியிடங்களுக்கு கொண்டு சென்று பொதி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொழிலாளர் உரிமைகளை பாதுகாக்க கோரியும் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் நேற்று (16.05.2025) காலை முதல் அதிகளமான பொலிஸார் குவிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்புடன் பார ஊர்திகளில் உப்பு வெளியில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
அந்த உப்பளத்தில் கடந்த ஒன்பது வருடங்களுக்கு மேலாக பணியாற்றும் தற்காலிக பருவ கால ஊழியர்கள் தங்களுடைய பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இங்கு உற்பத்தியாகும் உப்பினை ஆனையிறவில் பொதி செய்து விநியோகிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை கடந்த புதன்கிழமை முன்னெடுத்தனர்.
முன்னெடுக்கப்பட்ட போராட்டம்
கடந்த 2016ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆனையிறவு உப்பு உற்பத்தி மையத்தில் தற்காலிகமாக இணைத்துக் கொள்ளப்பட்ட பருவ கால ஊழியர்கள் தங்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கப்படாமல் உரிய காலத்தில் உரிய வேதனம் வழங்கப்படாமல் உள்ளமை என்பவற்றை கோரியும் ஆனையிறவில் உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை வெளியிடங்களுக்கு கொண்டு பதனிடல் செய்யவேண்டாம் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களும் அங்கிருந்து வெளியிடங்களுக்கு பாரூர்திகளில் உப்புக் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று காலை குறித்த பகுதியில் நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்ததுடன் நேற்றைய முன்தினம் இரவு போராட்டத்தில் ஈடுபட்ட சிலருக்கு எதிராக நீதிமன்ற தடை உத்தரவு பெறப்பட்டு நேற்று காலை வழங்கப்பட்டது.
குறித்த போராட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், வருகை தந்து மக்களிடம் கலந்துரையாடி தனது முழுமையான ஆதரவை தெரிவித்து இருந்தார்.
மேலும் நேற்று, போராட்டத்தில் ஈடுபட்ட மக்களின் தொழில் திணைக்கள அதிகாரிகள் நியாயப்பாடுகளை கேட்டு அறிந்து கொண்டு உப்பளத்தையும் சென்று பார்வையிட்டனர்.
இதனையடுத்து தேசிய உப்புக் கூட்டுத்தாபனத்தினுடைய பொது முகாமையாளர், துவான் மன்சூர் மற்றும் தேசிய தேசிய உப்பு கூட்டு தாபன பிரதிநிதிகளும் நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் கலந்துரையாடியும் தீர்வு எட்டப்படாத நிலையில் குறித்த கலந்துரையாடல் நிறைவுபெற்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
