லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகி யானை உயிரிழப்பு(Photos)
புத்தளம் அநுராதபுரம் பிரதான வீதியின் கருவலகஸ்வெவ 12ம் கட்டைப் பகுதியில் யானைக் குட்டியொன்று இன்று (04) அதிகாலை லொறியில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் உயிரிழந்துள்ளது.
முல்லைத்தீவு பகுதியிலிருந்து புத்தளம் ஊடாக கொழும்புக்கு மீன்களை ஏற்றிச் சென்ற லொறியில் மோதுண்டே குறித்த யானைக் குட்டி உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனை
இவ்வாறு உயிரிழந்த யானைக்கு நிகாவெரெட்டிய மிருக வைத்தியர் இசுருவினால் பிரேத பரிசோதனை முன்னெடுக்கப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் இதன்போது தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த யானை தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும்
கருவலகஸ்வெவ பொலிஸார் லொறியின் சாரதியிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத்
தெரிவித்துள்ளனர்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 19 மணி நேரம் முன்

ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
