கிளிநொச்சியில் உயிரிழந்த நிலையில் யானை! விசாரணைகள் ஆரம்பம்
கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று பிரதேச மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இரவு குறித்த பகுதிக்கு வந்த காட்டு யானை வயலை உணவாக்கி அழித்துள்ளதுடன், அப்பகுதியில் உயிரிழந்துள்ளது.
இன்று காலை வயல் நிலத்தைப் பார்வையிடச் சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராம சேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்த யானை தந்தந்துடன் காணப்படுவதுடன், மக்கள் அதனைப் பார்வையிட்டு வருகின்றனர்.
குறித்த பகுதி அடர் காட்டினை அண்மித்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
யானை உயிரிழந்தமை தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசாரும், வனஜீவராசிகள் திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri
