திருகோணமலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்த காட்டு யானை - இன்று மீட்பு
திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிந்தபுர பகுதியிலுள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து காட்டு யானையொன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை இன்று(23.06.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
யானை உயிரிழந்தமை தொடர்பான விசாரணை
குளத்திற்குள் யானையொன்று இறந்து கிடப்பதைக் கண்ட பிரதேசவாசிகள், இது குறித்து சேருநுவர பொலிஸாருக்கும் வனவிலங்கு அதிகாரிகளுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்தக் காட்டு யானை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் வனவிலங்கு கால்நடை மருத்துவர்களினால் பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து சேருநுவர வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
90ஸ் கிட்ஸ்களின் பேவரெட் தொகுப்பாளினி பெப்சி உமாவா இது... ஆளே மாறிவிட்டாரே, லேட்டஸ்ட் போட்டோ Cineulagam
4 நாள் முடிவில் வசூல் வேட்டையில் தெறிக்கவிடும் சமந்தாவின் எங்கள் தங்கம்.. எவ்வளவு தெரியுமா? Cineulagam