ஒட்டிசுட்டான் பகுதியில் யானை தாக்குதல்! முச்சக்கரவண்டி சாரதி படுகாயம்
முல்லைத்தீவு-ஒட்டிசுட்டான் பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவமானது நேற்று (09.01.2026) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவில் இருந்து ஒட்டிசுட்டான் ஊடாக வவுனியா நோக்கி முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
யானை தாக்குதல்
குறித்த முச்சக்கரவண்டியில் இருவர் பயணித்திருந்த நிலையில், திடீரென வீதிக்கு குறுக்காக வந்த யானை தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதலின் காரணமாக முச்சக்கரவண்டி தடம் புரண்டு விபத்துக்குள்ளானதுடன், வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இதில் முச்சக்கரவண்டி சாரதியான வவுனியா சிறிநகர் பகுதியைச் சேர்ந்த ம. பாஸ்கரன் என்பவரே படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த நபர் உடனடியாக முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan