கிண்ணியா ஆலங்கேணி பகுதியில் யானை தாக்கியதில் வீட்டுக்கு பலத்த சேதம்
திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலக பகுதிக்குட்பட்ட ஆலங்கேணி பகுதியில் நேற்றிரவு (22) ஊருக்குள் நுழைந்த காட்டு யானை இரவு 11.00 மணியளவில் தாக்கியதில் வீடொன்றில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இரவு நேரத்தில் தூங்கி கொண்டிருக்கும் போது குறித்த யானை தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் வீடு மற்றும் உடைமைகள் சேதமாக்கப்பட்டு தான் மயிரிழையில் உயிர் தப்பியதாக வீட்டு உரிமையாளர் கூறியுள்ளார்.
நிம்மதியாக தூங்க முடியாத நிலை
குறித்த பகுதியில் அடிக்கடி யானை தொல்லை ஏற்படுவதனால் அந்தப் பிரதேச மக்கள் நிம்மதியாக தூங்க முடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பான யானை வேலி இன்மையால் யானை தொல்லையில் இருந்து பாதுகாக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |