பெட்ரோலில் இயங்கும் முச்சக்கரவண்டி! இரண்டு மணி நேரத்திற்குள் மின்சாரமாக மாற்றும் வசதி
இலங்கையில் முதற்தடவையாக மின்சார முச்சக்கரவண்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்சாலை மருதானை தொடருந்து திணைக்கள களஞ்சிய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வசதிகள்
இந்த தொழிற்சாலை, பெட்ரோலில் இயங்கும் முச்சக்கரவண்டியை இரண்டு மணி நேரத்திற்குள் மின்சாரமாக மாற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.
இந்த உற்பத்தி தொழிற்சாலை வளாகத்திலேயே Vega நிறுவனத்தின் ELEKTRATEQ முச்சக்கர வண்டியின் முழு உற்பத்தி செயல்முறையும் மேற்கொள்ளப்படுகிறது.
மேலும் மிக நவீன தொழில்நுட்பத்தில் தானாக இயங்கும் தகடுகளை கட்டிங் மற்றும் மடிப்பு இயந்திரங்கள், பேட்டரி உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் உள்ளிட்ட ஏராளமான தொழில்நுட்ப சாதனங்கள் இந்த தொழிற்சாலையில் பொருத்தப்பட்டுள்ளன.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

Brain Teaser Challenge: மனதை குழப்பும் புதிர்- 7 வினாடியில் திருடனின் மனைவியை கண்டுபிடிக்க முடியுமா? Manithan
