வடமாகாணத்தில் நடாத்தப்பட்ட உத்தேச மின்கட்டண கருத்து கோரல்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் இலங்கை மின்சார சபையினால் முன்மொழியப்பட்ட மின்சார கட்டணம் தொடர்பில் வடமாகாண மக்களின் கருத்துக்களை கேட்டறியும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது, நேற்றைய தினம்(06) யாழ் மாவட்ட செயலகத்தில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரலால் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றுள்ளது.
இறுதி தீர்மானம்
நிகழ்வில், வடமாகாணத்தின் திணைக்களங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், பொதுமக்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தகர்கள், பொறியியலாளர்கள், பேராசிரியர்கள் என பல தரப்பினரும் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி தமது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
இதேவேளை நாடு பூராகவும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட்ட கருத்துக்களை அடிப்படையாக கொண்டு மின்சார கட்டணம் தொடர்பில் இறுதியான தீர்மானத்தை எதிர்வரும் 17ஆம் திகதி ஆணைக்குழு அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லலித் சந்திரலால், ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தமித்த குமாரசிங்க ,ஆணைக்குழுவின் பிரதி பணிப்பாளர் நிலாந் சப்புமனகே ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








திருமணமான 7 நாட்களில் கணவன் உயிரிழப்பு.., தேனிலவு கொண்டாட காஷ்மீர் வந்தபோது துப்பாக்கிச்சூடு News Lankasri

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
