நாட்டு மக்களுக்கு மின்சக்தி அமைச்சர் வழங்கியுள்ள புதிய அறிவிப்பு
அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் மின்பட்டியல் மற்றும் பற்றுசீட்டு என்பவற்றில் புதிய நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபையின் நாடளாவிய உயரதிகாரிகளுடனான இணையவழி சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது,மின்சார சபையின் செலவுகளைக் குறைக்க எடுக்கப்படக்கூடிய மேலதிக நடவடிக்கைகள் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளன.
புதிய தீர்மானங்கள்
இது தொடர்பில் அமைச்சர் கூறுகையில்,“அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ஜனவரி முதல் காகிதமல்லா மின்பட்டியல் மற்றும் பற்றுசீட்டு முறைமையை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய,தெரு விளக்குகளை முறையாக பொருத்துதல் மற்றும் இயக்குவதை ஒழுங்குபடுத்தல் குறித்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், வெளி சேவைகள் மற்றும் இலங்கை மின்சார சபையால் செய்ய முடியாத வேலைகளை உள்ளூராட்சி சபைகளின் ஆதரவுடன் மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.”என கூறியுள்ளார்.