வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு! வெளியானது அறிவிப்பு
வார இறுதி நாட்களிலும் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதற்கமைய, நாளை P, Q, R, S, T,U, V, W ஆகிய பிரிவுகளில் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரையான காலப்பகுதியில் 3 மணிநேர மின்வெட்டும், மாலை 6 மணி தொடக்கம் 10 மணிவரையான காலப்பகுதியில் 1 மணிநேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், E மற்றும் F ஆகிய பகுதிகளில் காலை 8.30 தொடக்கம் மாலை 4.30 வரையான காலப்பகுதியில் 4 மணிநேர மின்வெட்டும், மாலை 4.30 தொடக்கம் 10.30 வரையான காலப்பகுதியில் 3 மணிநேர மின்வெட்டும் நடைமுறைப்படுத்தப்படுடும்.
இதேவேளை, நாளை மறுதினம் காலை 9.00 மணி முதல் 4.30 மணிவரையான காலப் பகுதியில் A, B, C ஆகிய பிரிவுகளில் 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.