நீர் மின் உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரிப்பு
நாட்டின் நீர் மின் உற்பத்தி இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகத் இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரியொருர் இந்த விடயத்தை தெற்கு ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
அதிகளவான மழை காரணமாக இவ்வாறு மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் மொத்தமாக நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 15.66 கிகாவோட் மணித்தியாலங்கள் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
மொத்த மின் உற்பத்தி
இது மொத்த மின் உற்பத்தி விநியோகத்தின் 41.91 வீதம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாத ஆரம்பத்தில் 8.16 கிகாவோட் மணித்தியால மின்சாரம், நீர் மின் உற்பத்தி நிலையங்கள் ஊடாக உற்பத்தி செய்யப்பட்டது.
நீர் மின் விநியோகம் அதிகரித்துள்ள காரணத்தினால் அனல் மின் உற்பத்தி விநியோகம் 25 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |