கட்டாயம் மின் தடை ஏற்படும் ஆபத்து! இலங்கையில் ஏற்படவுள்ள நிலை தொடர்பில் எச்சரிக்கை
மின்சார சபை மற்றும் ஏனைய தொழிற்சங்கங்கள் இணைந்து எதிா்வரும் 24ஆம் திகதியன்று கூட்டு எதிா்ப்பு கூட்டறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளன.
இலங்கை மின்சார சபை தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவா் ரஞ்சன் ஜெயலால் இந்த தகவலை “தமிழ்வின்”னிடம் தொிவித்தார்.
யுகதனவி மின்சார நிலையத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்பனை செய்தமைக்கு எதிராக ஏற்கனவே மின்சாரசபையின் தொழிற்சங்கங்கள் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
இந்த எதிர்ப்புக்கு ஏனைய தொழிற்சங்கங்களும் ஆதரவை வழங்கிவருகின்றன.
இந்தநிலையில் எதிர்வரும் 24ஆம் திகதியன்று கொழும்பு நூலக வளாகத்தில் தொழிற்சங்கங்கள் இணைந்து கையெழுத்திட்டு கூட்டு அறிக்கையை வெளியிடவுள்ளதாக ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதியன்று கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றையும் நடத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை மின்சாரசபையை 6 அலகுகளாக பிரித்து, அவற்றை இறுதியில் விற்பனை செய்யும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகவும் ரஞ்சன் ஜெயலால் கூறியுள்ளார்.
முகாமை இலகுப்படுத்தலுக்காக இது மேற்கொள்ளப்படுவதாக கூறப்பட்டாலும் இறுதியில் விற்பனையைக் கருத்திற்கொண்டே இந்த செயற்பாட்டை அரசாங்கம் மேற்கொள்கிறது என்று அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதமளவில் இலங்கையில் அனல்மின்சார நிலையங்களுக்கான நிலக்கரி உட்பட்ட உள்ளீடுகளின் பற்றாக்குறைக் காரணமாகவும், நாட்டில் வறட்சி ஏற்படும் என்பதன் காரணமாகவும் மின்சார உற்பத்தியில் குறைவு ஏற்பட ஏதுநிலை உள்ளது.
இதன்போது அரசாங்கம், மின்சார விநியோக தடையைக் ஏற்படுத்தவேண்டிய அவசியம் ஏற்படும். இது அரசாங்கத்துக்கு எதிராக மக்களின் எதிர்ப்பை வலுப்படுத்தும்.
எனவே அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்க செயற்பாடுகளை தாம் முன்னெடுத்து மக்களின் எதிர்ப்புக்களை எதிர்கொள்ளவேண்டியதில்லை என்றும் ரஞ்சன் ஜெயலால் ”தமிழ்வின்”னிடம் தெரிவித்தார்.



விமானங்களில் இருந்து தப்பித்து எதிரிப் பகுதிக்குள் விழும் விமானிகள் ஏன் தாக்கப்படுவதில்லை? News Lankasri
