வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் (Photos)
வவுனியா மின்சாரசபையின் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மதியம் 12 மணிக்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பிரதம மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த குறித்த ஆர்ப்பாட்டமானது அங்கிருந்து பூங்கா வீதியூடாக புகையிரத நிலைய வீதியை அடைந்து, அங்கிருந்து மணிக்கூட்டுக்கோபுர சந்தியை சென்றடைந்தது.
மணிக்கூட்டுக் கோபுரத்திலிருந்து ஏ9 வீதியில் தடை ஏற்படுத்தியதுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பழைய பேருந்து நிலையத்தினை சென்றடைந்தமையால் ஏ9 வீதியில் சில மணி நேரப் போக்குவரத்து தடை ஏற்பட்டிருந்தது.
சுமார் 2 மணி நேரத்திற்கும் அதிகமாக இடம்பெற்ற குறித்த போராட்டத்தில்
ஜனாதிபதிக்கு எதிரான கோசங்களை எழுப்பியிருந்ததுடன், எரிவாயு இன்மை,
மின்சாரமின்மை, எரிபொருள் இன்மை, மின்சார வழங்கலை விற்பனை செய்யாதே போன்ற
வாசகங்கள் எழுதி பதாதைகளை தங்கியிருந்ததுடன் கோஷங்களை எழுப்பியிருந்தனர்.









அரபு, இஸ்லாமிய நாடுகளின் எச்சரிக்கை... முதல் முறையாக இஸ்ரேலின் திட்டத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு News Lankasri
