மின்சார கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது!இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வலியுறுத்து
உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
இலங்கை மின்சார சபை கடந்த சில வருடங்களாக பாரிய நட்டத்தைச் சந்திக்கவில்லை எனவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
6.9 மில்லியன் மின் பாவனையாளர்கள் கையொப்பமிட்ட பொது மனுவை இன்று தனது அலுவலகத்தில் ஏற்றுக்கொண்ட ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, குறைந்தபட்சம் 35 பில்லியன் ரூபா மின்சார சபையில் இருந்து மறைமுகமாக வெளியேறுகிறது.

இந்தநிலையில் 35 பில்லியன் ரூபா நட்டம் என்று கூறப்படுவதற்கான முக்கிய காரணமாக, நிர்வாகத்தை துல்லியமாக நிர்வகிக்க இயலாமையே ஆகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மெட்ரிக் தொன் நிலக்கரியை மதிப்பிடும்போது, 90 டொலர் விலை வித்தியாசம் உள்ளது. இந்தக் கணக்கீட்டில் பிழை உள்ளது என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன் விளைவாக, தவறான மதிப்புகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டண உயர்வை
நிராகரிப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் ஜனக
ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பிரான்சில் சீற்றத்தை ஏற்படுத்திய பிரித்தானிய மாணவி: இங்கிலாந்து இளைஞர்களுக்கு கிளர்ச்சி அழைப்பு News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
ரூ. 634 கோடிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... ஊழல் குறித்து சீரியல் நடிகை ஜனனி அசோக் Cineulagam